தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு? பாட புத்தகங்கள் அனுப்ப உத்தரவு!

3
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு? பாட புத்தகங்கள் அனுப்ப உத்தரவு!
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு? பாட புத்தகங்கள் அனுப்ப உத்தரவு!
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு? பாட புத்தகங்கள் அனுப்ப உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு குடோன்களில் உள்ள இலவச பாட புத்தகங்களை அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதை அடுத்து தமிழகத்தில் ஜூன் 3வது வாரத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சில தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். இதனால் தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 14 முதல் மாணவர் சேர்க்கை மீண்டும் தொடக்கம் – அரசு அறிவிப்பு!!

அது என்னவென்றால் தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்கு வழங்கப்படும் பாட புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டு குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இலவச பாட புத்தகங்கள் அனைத்தும் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்ப பள்ளி கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து சுமார் 5 கோடி பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த செய்தி வெளிவந்த நிலையில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் இதற்கான முறையான தகவல்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளிகள் திறக்கவில்லை என்றாலும் ஜூன் 3 ஆம் வாரத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. வணக்கம் ஐயா,

    * பள்ளி திறப்பு எப்போது?

    * 11வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி?

    * 11,12வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி?

  2. Covid is not controlled fully in Chennai. As a parent we will not allow our children to go to school or college until the disease is in 0% position. I request the government to continue the online classes for the students for some more months.

  3. Pls open the schools and colleges as soon as possible…1 year is completely wasted by corona…so this after pls open the schools and colleges 🙏🙏… our life is dependent on education only

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!