
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் வருகிற ஜூன் 13 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னேற்பாடுகளாக புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா காலகட்டமாகிய 2020 மற்றும் 2021 ல் பல மாற்றங்கள் அமைந்தது. ஏனென்றல் வைரஸ் தொற்றால் பல கோடி மக்கள் பலியானார்கள். இதனால் அரசும் நாட்டில் மக்களின் நன்மைக்காக பல புது மாற்றங்களை அமலுக்கு கொண்டு வந்தது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் பள்ளிகள், அலுவலகங்கள் என ஏதும் செயல்படாமல் மாணவர்களும், பெற்றோர்களும் அவதிப்பட்டனர். இந்த ஆண்டு எல்லாம் பழைய நிலைக்கு மாறி பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு நாள் முறையில் தேர்வுகளும் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.
அதை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அனைத்தும் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளும் ஜூன் 13அன்று திறக்கப்படும் என முன்னதாகவே கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தபடி வருகிற திங்களை கிழமை அன்று திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருவதால் அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதிலும் முக்கியமாக பள்ளிகள் திறக்க பட உள்ளதால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதாவது தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்படுகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.