அடுத்த இரு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்? கல்வி அமைச்சகம் விளக்கம்!

0
அடுத்த இரு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்? கல்வி அமைச்சகம் விளக்கம்!
அடுத்த இரு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்? கல்வி அமைச்சகம் விளக்கம்!
அடுத்த இரு வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்? கல்வி அமைச்சகம் விளக்கம்!

இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடியால் பள்ளிகள் 2 வாரம் வரை தற்காலிகமாக மூடப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த விவரத்தை காண விரும்பினால் இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளவும்.

பொருளாதார நெருக்கடி

இலங்கைக்கான வருமானம் குறையத் தொடங்கியதால், இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த அமெரிக்க டாலர் தொடர்ந்து குறைய தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலர் கையில் இல்லாவிட்டால் எந்த விதமான பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாது என்ற காரணத்தால் இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆகையால், இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த பணவீக்கம் அன்றாட தினங்களில் புதிய புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து போய் விட்டதாக கருதப்படுகிறது. மேலும், நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பல்கலை கால அட்டவணையை மாற்ற வலியுறுத்தல்!

இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. டீசல், பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாட்டினால் திங்கட்கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்சாரம் கிடைத்தால் ஆன்லைன் பாடம் நடத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here