ஆகஸ்ட் 23 ல் பள்ளிகள் திறப்பு உறுதி – கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!
கர்நாடகா மாநிலத்தில் முன்னதாக அரசு திட்டமிட்டுள்ள படியே ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. முன்னதாக கர்நாடகா மாநிலத்தில் பாதிப்புகளின் நிலைமை குறைந்து வருவதன் காரணமாக ஜூலை 26ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மாநில கல்வி வாரியம் தெரிவித்தது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு!
இந்நிலையில்,கடந்த 5 நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு தொற்று அதிக அளவில் பரவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கல்லூரி தீர்ப்பிற்கு பிறகு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து குழந்தைகளுக்கு பாதிப்பு பரவல் அதிகரிப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றிய குழப்பம் எழுந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இது தொடர்பாக கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அவர்கள், ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படாது. தொடக்க பள்ளிகள் திறப்பது குறித்து இந்த மாதத்தின் முடிவில் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.