ஜூலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மத்தியபிரதேச அரசு அறிவிப்பு!!

0
ஜூலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - மத்தியபிரதேச அரசு அறிவிப்பு!!
ஜூலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - மத்தியபிரதேச அரசு அறிவிப்பு!!
ஜூலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – மத்தியபிரதேச அரசு அறிவிப்பு!!

மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு மாநில அரசு ஆய்வுகள் நடத்தி வந்த நிலையில், தற்போது ஜூலை 26ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க இருப்பதாக மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அங்கு கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசு கடந்த மாதம் முதல் ஆலோசனை நடத்தி வந்தது. ஜூலை மாத கொரோனா நிலைமையை மறுபரிசீலனை செய்த பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று கடந்த மாதம் முதல்வர் மாநில முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

தமிழக அரசு பொதுப்பணித்துறையின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து முக ஸ்டாலின் ஆய்வு !!

மேலும், விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றதற்கு பின்பு தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசின் கருத்தை ஜூன் 23 அன்று நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் கல்வியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், ஜூலை 26ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 50% மாணவர்களுடன் கல்லூரிகள் திறக்க இருப்பதாவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here