தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 13 முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் கடந்த 13ம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை துவங்கி இருக்கும் நிலையில் வரும் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் நிலவி வரும் கோடை வெப்பத்தின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 13ம் தேதி துவங்கி 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மறுபக்கத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த வாரத்தில் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டது.

Post Office இல் தேர்வு இல்லாமல் 38,926 பேருக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த நிலையில் தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது அறிவித்துள்ளார். அதன்படி, மே மாதம் 13ம் தேதியன்று துவங்கிய கோடை விடுமுறைகள் ஜூன் 12ம் தேதியன்று முடிவடையும் நிலையில், ஜூன் 13 முதல் புதிய வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

அதன்படி, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதியன்று புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க இருக்கிறது. தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்குவதில் கால தாமதம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் இப்போது ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here