அக்.1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – மதிய உணவு திட்டம் துவக்கம்!

0
அக்.1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு - மதிய உணவு திட்டம் துவக்கம்!
அக்.1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு - மதிய உணவு திட்டம் துவக்கம்!
அக்.1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – மதிய உணவு திட்டம் துவக்கம்!

கர்நாடகா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 100% திறனுடன் பள்ளிகள் செயல்பட இருப்பதால், விரைவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய உணவு வழங்கல்:

கர்நாடகா மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மதிய உணவு திட்டத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. அதாவது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் 100 சதவீத திறனுடன் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்காக மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அக்.1 வரை இம்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இது தொடர்பாக அம்மாநிலத்தின் முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘கர்நாடகா பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவை மீண்டும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவில் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் மதிய உணவுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது. தற்போது கர்நாடகாவில் பள்ளிகள் மீண்டுமாக துவங்கியுள்ளதால் மாணவர்கள் வீடுகளில் இருந்து உணவுகளை எடுத்து செல்கின்றனர்.

IPL 2021: SRH vs RR இன்று பலப்பரீட்சை! பிட்ச் ரிப்போர்ட் & உத்தேச அணி விவரம்!

இதை கவனித்த மாநில அரசு, மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மதிய உணவை மீண்டும் தொடங்குவது மிகவும் அவசியம் என்று பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மதிய உணவை பரிமாறும் போது சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதிய உணவு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் அரசு முடிவு செய்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!