தமிழகத்தில் நவ.15 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – DEO செயல்முறைகள்!

0
தமிழகத்தில் நவ.15 முதல் 1 - 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - DEO செயல்முறைகள்!
தமிழகத்தில் நவ.15 முதல் 1 - 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - DEO செயல்முறைகள்!
தமிழகத்தில் நவ.15 முதல் 1 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – DEO செயல்முறைகள்!

கனமழையின் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எனவே பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது தொடர்ந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை 7 நாட்களுக்கு மேல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடலூர் மாவட்டத்தில் எதிர்பாராத தொடர் மழையின் காரணமாக 1.11.2021 முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – SMS மூலம் மோசடி! கவனம் தேவை!

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 13.11.2021 முதல் 9 முதல் 12 – ஆம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கும், 15.11.2021 முதல் 1 ஆம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

  • பள்ளி வளாகம் துாய்மை செய்ய வேண்டும்.
  • நீர் தேங்கி இருந்தால் அவை அகற்றப்படுதல் வேண்டும்.
  • முட்புதர்கள் ஏதேனும் மழை நீர் தேங்கியிருப்பின் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
  • குடிநீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
  • கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தும் வகையில் இருத்தல் வேண்டும்.
  • மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
  • கட்டடங்களின் மேற்கூரைகள் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் தேங்காவண்ணம் உள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
  • பள்ளி கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் பராமரிக்கப்பட்டு பயன்படும் நிலையில் இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!