மாநிலத்தில் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? முதல்வரின் முடிவு!
மேற்கு வங்கத்தில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முன்னதாக திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
மேற்கு வங்காளத்தின் கோவிட்-19 மொத்த எண்ணிக்கை 20,08,950 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் மாநிலத்தில் மொத்தம் 817 பேர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 26 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 20,938 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் அதிகபட்சமாக 135 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 133 வழக்குகள் பதிவாகியுள்ளன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. கொல்கத்தா மற்றும் பாஸ்கிம் பர்தமான் மாவட்டங்களில் தலா நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.
அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் இதோ!
தற்போது கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 590 குறைந்து 14,805 ஆக இருந்தது. மேலும் 1,381 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் 19,73,207 ஆகவும், குணமடைந்துள்ளவர்களின் விகிதம் 98.22 சதவீதமாக சீரடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,495 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பாதிப்புகள் குறைந்ததை அடுத்து, பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளன, இருப்பினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவிட்-19 நிலைமையைஇன்னும் சில நாட்கள் கழித்து மதிப்பிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
Airtel, Jio, VI பயனர்கள் கவனத்திற்கு – ரூ.499க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
பிப்ரவரி 3 ஆம் தேதி 8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘பரே ஷிக்ஷாலே’ என்ற திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா வைரஸின் மற்றொரு மாறுபாடு குறித்த அச்சுறுத்தல்கள் இருப்பதால் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு சில எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகளை மாற்று நாட்களில் வரும் மாணவர்களுடன் தொடங்கலாம் என்றும், இது குறித்து நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் பேச வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.