இரவு 8 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி – பள்ளிகள் மீண்டும் திறப்பு! அரசு அறிவிப்பு!

0
இரவு 8 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி - பள்ளிகள் மீண்டும் திறப்பு! அரசு அறிவிப்பு!
இரவு 8 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி - பள்ளிகள் மீண்டும் திறப்பு! அரசு அறிவிப்பு!
இரவு 8 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி – பள்ளிகள் மீண்டும் திறப்பு! அரசு அறிவிப்பு!

ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் வீழ்ச்சியடைந்து வந்ததை கவனத்தில் கொண்டு பள்ளிகள் அனைத்தும் 1 முதல் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மீண்டுமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டிருக்கிறது.

பள்ளிகள் திறப்பு

மிகக் குறைவான அளவு கொரோனா புதிய பாதிப்புகளை பதிவு செய்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (பிப்.1) முதல் செயல்படத் தொடங்கி இருக்கிறது. இந்த அறிவிப்பானது, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று (ஜன.31) நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று (பிப்.1) முதல் வழக்கம் போலவே செயல்பட துவங்கி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய ஆபத்து! அரசு எடுக்கப்போகும் முடிவு!

அதே நேரத்தில், கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளை உள்ளடக்கிய ஏழு மாவட்டங்களில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாநிலத்தில் கொரோனாவின் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு, ஜனவரி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதனுடன் கொரோனா நோய்த்தொற்றின் வேகம் குறைவாக இருப்பதால், மாநிலம் முழுவதும் தளர்வுகளை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்தது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் அஞ்சலி ஸ்வீட்டி – அவரே அளித்த பதில்! ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் இனி 100 பேருக்குப் பதிலாக 200 பேர் கலந்து கொள்ள முடியும். அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளும் முன்பு போலவே தொடங்கும். தொடர்ந்து பார்வையாளர்கள் இல்லாமல் அனைத்து உடற்பயிற்சி கூடங்களும், பயிற்சி மையங்களும் திறக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு 8 மணிக்குப் பிறகு கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதமாக திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here