செப்.20ம் தேதி 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்ப்பு!
மத்திய பிரதேசத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 20ம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. தினசரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. இடையில் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அடுத்த தாக்குதலாக கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்தால் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல் – அதிர்ச்சி தகவல்!
அதன் விளைவாக தற்போது இந்தியா முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சில மாநிலங்களில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மத்திய பிரதேசத்தில் 1 முதல் 5 ம் வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்!
மேலும் மாணவர்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதல் கடிதத்துடன் பள்ளிக்கு வர வேண்டும். இந்நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க தொடக்கப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்று முழுமையாக குறையாத காரணத்தால் பள்ளிகளை திறக்க வேண்டாம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.