1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 16ம் தேதி பள்ளிகள் திறப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
கொரோனா எதிரொலியாக பள்ளி மாணவர்கள் கடந்த 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் மாணவர்கள் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது குறைந்து உள்ளது. மேலும் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முக்கிய அறிவிப்பு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருட கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் முறையில் இடைவெளி ஏற்பட்டது. மேலும் நோய் பரவல் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் வந்ததால், பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து கோடை வெயில் காரணமாக மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இன்னும் 2 நாட்களில், பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டின் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஜூன் 16-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் விளையாட்டு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, பேட்மிண்டன், கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகிய போட்டிகளில் ஆண், பெண் இருபாலரையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், மாநில அளவிலான போட்டிகளுக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குறிப்பிட்ட விளையாட்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு, மாணவர்களை ஊக்கப்படுத்த, விளையாட்டு சங்க வல்லுநர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலர்கள், பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவையை பயன்படுத்த, அடிப்படை கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் “விளையாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதி மற்றும் பிரதேச அளவிலான பள்ளிகளுக்கும் நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன். இது அடிப்படைக் கல்வித் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது, என்று ஜிபி நகர், டிஎன்என் அடிப்படை சிக்ஷா அதிகாரி ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.