
1 முதல் 7ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பிப்.28 முதல் பள்ளிகள் திறப்பு! வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தற்போது ஒடிசா மாநிலத்தில் 1 முதல் 7 வரையுள்ள வகுப்புகளுக்கு பிப்ரவரி 28ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருப்பதால், மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக பல புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட இரண்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை பிப்ரவரி 28 முதல் மீண்டும் திறக்க ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பெரிய இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால், மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத, சுவாரஸ்யமாக கற்கும் சூழலை உருவாக்கி, அவர்களின் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ரூ.25000 காசோலையுடன் கூடிய விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு நல்லுறவைக் கட்டியெழுப்பும் பயிற்சி உட்பட பல நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நல்லுறவை உருவாக்கும் பயிற்சி ஒரு வார காலத்திற்கு நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஒரு வாரத்திற்கான கால அட்டவணை, பாடப்புத்தகம் தவிர மற்ற செயல்பாடுகள் அனைத்தும் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஒவ்வொரு குழந்தையின் கற்றல் நிலை மற்றும் கற்றல் இழப்பைக் கண்டறிதல் தவிர மொழி, கணிதம் மற்றும் ஆங்கிலத்திலும் குழந்தைகளின் அடிப்படை மதிப்பீடு செய்யப்பட இருக்கிறது.
தொடர்ந்து தொற்றுநோய் காலத்தில் மாணவர்கள் தங்களின் நல்ல நினைவுகளை பகிர்ந்து கொள்வது, பொழுதுபோக்கு போன்றவற்றை பகிர்ந்து கொள்வதற்கான திறந்த விவாதம் நடைபெறும் என்றும் மாணவர்களின் மூளைக்கு வேலை தரும் வகையில் வார்த்தை புதிர் விளையாட்டு, பழங்களின் பெயர், விலங்குகளின் பெயர் போன்றவை, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், களிமண் மாடலிங் மற்றும் படத்தொகுப்பு வேலைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.