தமிழகத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை!

0
தமிழகத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு - நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு - நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் திறப்பு – நேரத்தை மாற்ற ஆசிரியர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் வெயில் கொளுத்துவதால் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்து உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. இதையடுத்து வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு வெயில் இயல்பு நிலையில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது அடிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வரும் நிலையில் இன்னும் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நேரத்தை மாற்றி காலை 7.30 மணியிலிருந்து 12.30க்கு மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் தாக்கம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது. நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெயிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here