டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

0
டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அரசு உத்தரவு!
டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - அரசு உத்தரவு!
டிசம்பர் 24 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

காஷ்மீரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கும், ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் டிசம்பர் 24ம் தேதி முதல் குளிர்கால விடுமுறையை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் ஆண்டின் குளிர் காலத்தில் அதிகப்படியான குளிர் நிலவும் என்பதால் அங்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படுகிறது. தற்போது குளிர் காலம் துவங்கியுள்ளதால் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் மூடப்பட்டிருந்தது. சமீப சில மாதங்களாக தான் தொற்று பரவ குறைந்திருந்த மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் கொரோனா தொற்று நிலைமை சீரடைந்திருந்த காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது. இந்நிலையில், காஷ்மீரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கும், ஜம்முவின் குளிர்கால மண்டலங்களில் உள்ள 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு டிசம்பர் 6 முதல் பிப்ரவரி 28 வரை அரசு கடந்த வாரம் விடுமுறை அறிவித்தது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான குளிர்கால விடுமுறைகள் டிசம்பர் 13 முதல் பிப்ரவரி 28 வரை இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

அரசின் உத்தரவின்படி, ஜம்மு கோட்டத்தின் கோடை மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்நிலை நிலை வரையிலான அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் டிசம்பர் 24 முதல் ஜனவரி 2, 2022 வரை குளிர்கால விடுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு பள்ளிகளுக்கான இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. மேலும், குளிர்கால விடுமுறைக்கு முன்னதாக ஆன்லைன் தேர்வுகளை முடிக்க அரசு பள்ளிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!