தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? தொடக்க கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் அங்கன்வாடிகளில் உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி, யூ.கே.ஜி:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்ததால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளால் தீவிரம் காட்ட தொடங்கியது. அதன் விளைவாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 – ஹோலி பண்டிகைக்கு முன் வழங்கல்? முழு விவரம் இதோ!

அதனை தொடர்ந்து மழலையர் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பெருநகரங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை, காலணி உள்ளிட்ட பொருட்கள் அரசு சார்பாக வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினரை சேர்ப்பது எப்படி?

இந்த நிலையில் தற்போது எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் மூடப்படவிருப்பதாக வெளியாகும் தகவல் தவறானது என்று தொடக்க கல்வி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,381 இடங்களில் செயல்படும் வகுப்புகளும் கண்டிப்பாக மூடப்படமாட்டாது. எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளில் பாடம் நடத்தத் தேவையான ஆசிரியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ம் எல்.கே.ஜி, யூ.கே.ஜி, வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here