தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூடல் – வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தீவிரம் இன்னும் குறையாத நிலையில், பள்ளி கல்லூரிகளை திறப்பது சரியான முடிவு இல்லை. இந்த முடிவு அதிக ஆச்சிரியத்தை அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பள்ளிகளை மூட வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் பள்ளிகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா,ஓமைக்ரான் பாதிப்பு காரணமாக புத்தாண்டு முதலே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளி கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறினார். மேலும் தனியார் பள்ளிகள் சார்பில் தமிழக அரசுக்கு பள்ளிகளை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
CSK கேப்டன் ‘தல’ தோனி உடன் இணைந்த நடிகர் விக்ரம் – திடீர் சந்திப்பு! வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளி கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் இன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் 15- 18 வயது மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு பள்ளிகளுக்கு வர வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பிப்.4 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு! மாணவர்கள் உற்சாகம்!
இந்த அறிவிப்புக்கு பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத இந்த நிலையில் பள்ளிகளை திறந்தது தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டு உள்ளன என பாமக இளைஞரணித் தலைவர் தனது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.