தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்? மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த கல்வித்துறை!

0
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்? மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த கல்வித்துறை!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்? மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த கல்வித்துறை!
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்? மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்த கல்வித்துறை!

தமிழகத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் 415 தனியார் பள்ளிகள் அரசிடம் அனுமதி பெறவில்லை. அதனால் அந்த தனியார் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகள் மூடல்:

தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளை தவிர நிறைய தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் 25 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆரம்ப அனுமதியை பெறவில்லை. மேலும், 390 நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்க அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் இந்த பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாளை நடக்கிறது. அந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளின் அங்கீகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், திருவள்ளூர் மாவட்டத்தில் 343 பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், 121 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிக்கவில்லை. அதேபோல சென்னை மாவட்டத்தில் இயங்கிவரும் 290 பள்ளிகளில் 85 பள்ளிகள் என 11 மாவட்டங்களில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீதத்திற்கும் மேல் அங்கீகாரத்தை புதுப்பிக்க வில்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 25 பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நர்சரி, பிரைமரி பள்ளிகளில் 390 தனியார் பள்ளிகள் தொடக்க அனுமதி பெறாமல் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. இந்த பள்ளிகளும், வரும் கல்வியாண்டு தொடங்குவதற்குள் அனுமதியை பெற வேண்டும். இல்லை என்றால் அந்த பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் மேற்கண்ட பிரச்சனைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளனர். அதற்கு பிறகு அந்த தனியார் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!