உச்சகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.. தலைநகர் டெல்லியில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்!!

0
உச்சகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.. தலைநகர் டெல்லியில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்!!
உச்சகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.. தலைநகர் டெல்லியில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்!!
உச்சகட்டத்தை எட்டிய காற்று மாசுபாடு.. தலைநகர் டெல்லியில் மீண்டும் மூடப்படும் பள்ளிகள்!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் தற்போது காற்றின் தரம் அதிக அளவில் மோசமடைந்து இருப்பதாகவும், இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க டெல்லி அரசுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

டெல்லியில் அதிக அளவில் காற்றின் தரம் குறைந்து உள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தனி தனியாக வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், 50% காற்று மாசு வாகன புகையால் தான் ஏற்படுவதாகவும் டெல்லியின் சுற்றுசூழல் அமைச்சர் கூறினார். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் முடிந்த அளவு வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

ஐடி ஊழியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி.. தடாலடியாக குறைக்கப்பட்ட சம்பளம் – இன்போசிஸ் முடிவு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (The National Commission for Protection of Child Rights), டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்து உள்ளதால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நேற்று காற்றின் தரம் குறித்து வெளியான அறிக்கையில், மோசமான காற்று ஆரோக்கியமாக உள்ள மனிதர்களின் உடல்நலனையே பாதிக்கும் தன்மை கொண்டது, இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!