தமிழகத்தில் பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும் – பெற்றோர்கள் வலியுறுத்தல்!!

4
தமிழகத்தில் பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும் - பெற்றோர்கள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும் - பெற்றோர்கள் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும் – பெற்றோர்கள் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை தாமதமின்றி திறக்க வேண்டும் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் பிறபகுதி முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. பின்னர் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் அசாம், கர்நாடகா, புதுச்சேரி, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களில் ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

எம்.எட் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

ஏற்கனவே நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ள நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்கள், தாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு எதிரொலி – 52 ஆசிரியர்கள் & 10 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!

நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதே நிலை தொடர்ந்தால் அவர்களை மீண்டும் படிக்க தூண்டுவது மிகவும் கடினமாகி விடும் என கூறி உள்ளனர். இன்றும் பல்வேறு பள்ளிகளில் கடைசி நாளாக கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் அனைத்து கருத்துகளையும் தொகுத்து அறிக்கையாக மாற்றி அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. No need to open the school because corona over after u can open school my mom told I need my children next class my child can study

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!