தினசரி காலை 6 மணிமுதல் 10.30 மணிவரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

0
தினசரி காலை 6 மணிமுதல் 10.30 மணிவரை பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
தினசரி காலை 6 மணிமுதல் 10.30 மணிவரை பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
தினசரி காலை 6 மணிமுதல் 10.30 மணிவரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மாநிலத்தில் தற்போது காணப்படும் அதிகளவு கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு பள்ளிகள் அனைத்தும் தினசரி காலை 6 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறப்பு:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளில் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏப்ரல் 26 அன்று ராஞ்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஜார்க்கண்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹதோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பள்ளிகளின் வகுப்பு நேரத்தை மாற்றியமைக்க அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளின் இயக்க நேர மாற்றம் இதனுடன் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதற்கு முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளின் இயக்க நேரத்தை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநில அரசு நிர்ணயித்தது. தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து பள்ளிகள் செயல்படும் நேரம் மீண்டுமாக மாற்றப்பட்டு, காலை 6 மணி முதல் மதியம் வரை வகுப்புகள் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் 9 மணிநேரம் தளர்வு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

ஆனால் இப்போது, கடுமையான வெப்பம் ஜார்க்கண்ட் அரசாங்கத்தை பள்ளி நேரத்தை குறைக்க தூண்டியுள்ளது. இதற்கிடையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் மே 2 முதல் 15ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்றும், ஓஎம்ஆர் தாள்களில் அப்ஜெக்டிவ் வகை வினாக்கள் இடம்பெறும் என்றும் பள்ளிக்கல்வி துறையின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் ஆண்டு நாட்காட்டியின்படி, மாணவர்களுக்கான கோடை விடுமுறை மே 17 முதல் ஜூன் 4 வரை அளிக்கவும், பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அளிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here