நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது – அரசு அறிவிப்பு!

0
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது - அரசு அறிவிப்பு!
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது - அரசு அறிவிப்பு!
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்படாது – அரசு அறிவிப்பு!

மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில், தற்போது மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி நவம்பர் 16 முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் சரியான கோவிட்-19 நெறிமுறையைப் பின்பற்றி திறக்கப்படும் என்று அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு பிறகு கல்வித்துறை அதிகாரிகள் வங்காளத்தில் கோவிட் -19 வழக்குகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல அரசு உதவி பெறும் பள்ளிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருப்பதால் நவம்பர் 16 முதல் மீண்டும் திறக்க முடியாது என்று தெரிவித்தனர்.

நவம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது – விடுமுறை பட்டியல் வெளியீடு!

கடந்த சனிக்கிழமை அன்று துர்கா பூஜை களுக்குப் பிறகு கோவிட் -19 வழக்குகள் அதிகரித்து வருவதால், மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைக்குமாறு தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டார். இதனால் வடக்கு-பர்கானாஸ், ஹவுரா, ஹூக்ளி மற்றும் ஜல்பைகுரி போன்ற சில மாவட்டங்கள் 150க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் மற்ற அனைத்து மாவட்டங்களும் புதிதாக வரையப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைக்க வேண்டிய நிலை உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் அவசர சேவைகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசின் வழிகாட்டுதல்களின் படி இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றும் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளதால், கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை தொடங்க முடியாது என்று மாவட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டபடி இந்த மண்டலங்களில் வரும் பள்ளிகளை நவம்பர் 16 முதல் மீண்டும் திறக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, புதிய ரேஷன் கார்டுகள் – அமைச்சர் முக்கிய தகவல்!

ஒவ்வொரு கட்டுப்பாட்டு மண்டலமும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தது 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதற்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் கட்டுப்பாட்டு மண்டலங்களின் காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here