1 – 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
1 - 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பள்ளிகள் திறப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!
1 - 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பள்ளிகள் திறப்பு - அரசு முக்கிய அறிவிப்பு!

1 – 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரியில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் 1 – 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 – 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு அதன்படி 1- 12ம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்த நிலையில் நாளை கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 20ம் தேதியும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த கல்வியாண்டிற்கான பாட புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தை தொடர்ந்து தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் 2022 – 2023 ம் கல்வியாண்டில் 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான பிறகு 11ம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கும் தேதி அறிவிக்கப்படும். மேலும் அடுத்த கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here