இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!

0
இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!
இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!
இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாநிலங்களின் பட்டியல் வெளியீடு!

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளதையடுத்து, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் அசாம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 20) முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படுகின்றன.

பள்ளிகள் திறப்பு

கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக மே மாதம் முதல் மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பள்ளிகளை திறக்க முடியாமல் போனது. ஆனால் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது குறைந்து வரும் கொரோனா தொற்று சூழலை கருத்தில் கொண்டு, பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இன்று (செப்டம்பர் 20) முதல் ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் அசாம் மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்காக மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இதனுடன், ஒடிசாவில் கல்லூரி மாணவர்களின் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – இன்று முக்கிய ஆலோசனை!

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று (செப்.20) முதல் 6 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் 50% திறனுடன் திறக்கப்பட உள்ளன. இது தொடர்பான வழிகாட்டுதல்களின்படி, பள்ளி வளாகத்தில் கொரோனா தொற்று காணப்பட்டால், அந்த வளாகங்கள் குறைந்தது 10 நாட்களுக்கு மூடப்படும் என்றும் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிகள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் மீண்டும் துவங்குகிறது. இருப்பினும், மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும். இது தொடர்பான ஜார்க்கண்ட் பேரிடர் மேலாண்மை பிரிவின் உத்தரவின்படி, வகுப்புகள் இப்போது ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!

மத்தியப் பிரதேசத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு 50% திறனில் பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 100% திறனுடன் பள்ளிகள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, குடியிருப்பு பள்ளிகளும் செயல்பட உள்ளது.

ஹரியானாவில் இன்று முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அசாமில், 10 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும், 50% திறனுடன் மட்டுமே மாணவர்களின் வருகை அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் இன்று முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முறையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!