தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி பள்ளிகள் & கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!
தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி பெருக்கை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை என்று அறிவித்துள்ளது.
உள்ளூர் விடுமுறை:
இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் தியாகி தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கயம் அருகில் உள்ள மேலப்பாளையம் என்ற ஊரில் இளம் வயதிலே போர் கலைகளை கற்று கொண்டு இவர் தனது நண்பர்களுக்கும் கற்றுக்கொடுத்து தனக்கென ஒரு படையை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார். அவரை கவரவிக்கும் விதமாக ஆகஸ்ட் 3 அதாவது அவரது நினைவு நாளினை உள்ளூர் விடுமுறையாக சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆடி 18 வருகின்றது.
தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
அன்று தமிழகத்தில் நீர் பாசனப் பகுதியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அதாவது நாம் ஒவ்வொரு வருடமும் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வருவது தான் மக்கள் ஆடி பெருக்கு என கொண்டாடி வருகின்றனர். உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதால், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் செயல்படுத்த முடியாத காரணத்தால் அரசு பாதுகாப்பு அவசர அலுவலகங்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த உள்ளூர் விடுமுறையை சரிக்கட்டுவதற்காக சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் பணி நாளாக செயல்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்