தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அடுத்தாக வரவுள்ள ஜூன் மாதத்தில் ஒரு வாரம் முழுவதும் மூடி போராட்டம் நடைபெற இருப்பதாக தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்ததாக வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மே 1 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை! இதற்காக தான்?
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளை தவிர நிறைய தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் 25 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆரம்ப அனுமதியை பெறவில்லை. மேலும், 390 நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்க அனுமதி பெறவில்லை. இந்த நிலையில் இந்த பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டதால் 75 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தமிழக அரசு கூறி இருந்தது.
மத்திய அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அதனை தொடர்ந்து, தற்போது சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் பெறப்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கையாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் சார்பில் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் போராட்டம் நடைபெற உள்ளதாக தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்கும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.