தமிழகத்தில் மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்?

0
தமிழகத்தில் மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்?
தமிழகத்தில் மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்?
தமிழகத்தில் மீண்டும் பள்ளி & கல்லூரிகள் மூடல்? உண்மை நிலவரம் இதுதான்?

உலகம் முழுவதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்படும் என்று வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்

தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்புகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட இருப்பதாக சில போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது தற்போது உலகளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாடு அதிக தீவிர தன்மையுடையதாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்து வருகிறது.

தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய கட்டணங்கள்!

ஏற்கனவே ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இந்த உருமாறிய வைரஸ் மீண்டும் பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிரமடைந்து வரும் இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் உலகளவில் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தற்போது தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்திருப்பதால், தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் மீண்டும் எழுச்சி அடைய வாய்ப்புகள் இருப்பதாக பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளது. மேலும் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற பேச்சுகளும் பரவலாக அடிபட்டு வருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஊக்கத்தொகை 5 மடங்கு உயர்வு! யார் யாருக்கு பலன்?

அந்த வகையில் தமிழகத்தில் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்படும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் தேர்தலுக்கு பின்பாக கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை வழக்கத்தை போலவே குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் இன்னும் ஊரடங்கு விதிக்கப்படுவதற்கும், கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் வாய்ப்புகள் இல்லை என்பதால் இது போன்ற போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here