மே 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
மே 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மே 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
மே 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டில், மே 16ல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

கொரோனா தொற்றுநோய் காரணமாக 2020 ஜனவரி இறுதியில் முதன் முதலில் சீனாவில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்தியாவைப் பொருத்தவரை கடந்த 2020 மார்ச் மாத இறுதியில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. 2021 செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பள்ளிகளைத் திறக்கலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டாலும் பெரும்பாலான மாநிலங்களில் டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவ – -மாணவியர் பாதிக்கப்பட்டனர். ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்தன.

Exams Daily Mobile App Download

மேலும் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பி.யு.சி., பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், 2022 – 23ம் கல்வி ஆண்டில் பள்ளி, கல்லூரிகளை முன்கூட்டியே திறக்க, கர்நாடக பள்ளி கல்வித் துறை முடிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கர்நாடகாவில் 2022- 23-க்கான கல்வி ஆண்டு, மே மாதம் தொடங்குகிறது. மேலும் மே 16ல் பள்ளி, பி.யு.சி கல்லுாரிகள் திறக்கப்படும். முதல் பருவ வகுப்புகள், அக்டோபர் 2 வரை நடக்கும். இரண்டாவது பருவ வகுப்புகள் அக்டோபர் 17ல் தொடங்கி, அடுத்த ஆண்டு 2023 ஏப்ரல் 10 வரை நடக்கும். இதை அடுத்து அக்டோபர் 3 – 16 வரை தசரா விடுமுறை விடப்படும். மாணவர் சேர்க்கை கோடை விடுமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ல் துவங்கி மே 28 வரை இருக்கும்.

பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – மாத ஊதியம் ரூ.2,18,200/-

புதிய கல்வி ஆண்டில் 60 அரசு விடுமுறைகள் வருகின்றன. மொத்தம் 256 நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும். அரசு பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மே 16ல் துவங்கி , ஜூலை 31 வரை நடக்கும். மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தால், அந்த சமயத்தில் பள்ளிகள் மூடப்பட்டால், ‘ஆன்லைன்’ வழியாக கல்வி கற்பிக்கப்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் குழந்தைகள் கற்றல் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடக்க கல்வி துறை அமைச்சர் நாகேஷ், பெங்களூரில் நேற்று ஜூன், ஜூலையில் கொரோனா 4ம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்து உள்ளனர். ஆனால் திட்டமிட்டப்படி மே 16 ல் 1ம் வகுப்பு முதல்10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும். போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படும். தற்போதைக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் இருந்து பின் வாங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here