பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!
மாநிலத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நேர மாற்றம் :
இந்தியாவில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. தென் மற்றும் வட மாநிலங்களில் வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்தகைய நேரத்தில் வெப்பம் கொளுத்தி வருவதால் பள்ளி மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு அசாம் மாநிலத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி திறப்பை தள்ளிவைக்க முடிவு? அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
அம்மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் முன்னதாக தொடங்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் படி பள்ளிகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் இந்த நேர மாற்றம் உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.