சீருடைகளை தீர்மானிக்கும் உரிமை பள்ளிகளுக்கு உண்டு – கவர்னர் உரை!
இந்தியாவில் பள்ளிகளில் மாணவர்கள் அணிந்து வரும் சீருடைகளை தீர்மானிக்கும் உரிமை பள்ளிகளுக்கு உள்ளது என்று கேரள மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
சீருடை:
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது மாநில அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இந்த அறிவிப்புக்கு மாணவிகள் கண்டனம் தெரிவித்து மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
டாப் 5 இடத்தில் சன் டிவி சீரியல்கள் – TRP பட்டியல் வெளியீடு!
இதற்கு மத்தியில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் சீருடைகளை தீர்மானிக்கும் உரிமை பள்ளிகளுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த உரிமை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். அத்துடன் மாணவர்கள் பள்ளிகள் முடிவு செய்யும் சீருடைகளை பின்பற்றுவது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.