பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 24 வரை விடுமுறை – காரணம் இதோ! முக்கிய அறிவிப்பு!
கொரோனா பரவலின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பள்ளி மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இதனால் வரும் ஜூலை 24 ஆம் தேதி வரைக்கும் அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்தியா முழுவதுமே கொரோனா நான்காம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனிடையே, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அனைத்து மக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கும் மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனிடையே, தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து தான் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் மட்டுமே ஒரே பள்ளியில் மட்டுமே பல மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்காலிகமாக அந்த பள்ளியை மூடியுள்ளனர். மேலும், அனைத்து பள்ளிகளிலுமே மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு கோரிக்கை! இதற்காக தான்!
இதனிடையே, மணிப்பூர் மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவுதலின் வீதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 12 வயதுக்கு உட்பட்ட பல மாணவர்கள் இன்னும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டும்படி மணிப்பூர் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்