தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியதை பற்றி பார்ப்போம்.
பள்ளி திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி புதுசா இந்த பொருளும் கிடைக்கும்!
இதையடுத்து இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அத்துடன் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் வரும் கல்வியாண்டு விரைவில் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இது தொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்றும் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி திறப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவித்தபடி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். அத்துடன் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் இது தொடர்பாக மருத்துவ நிபுணர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.