தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!

0
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - தூய்மை பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - தூய்மை பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க இருப்பதால் அனைத்து பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகள் மற்றும் மைதானங்களில் தூய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தூய்மை பணிகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து வரும் நவம்பர் 1ம் தேதி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3% DA உயர்வால் சம்பள அதிகரிப்பு! முழு விவரம் இதோ!

முன்னதாக நவம்பர் 1ம் தேதியில் இருந்து நர்சரி பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையின் முடிவில் நர்சரி பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் திட்டமிட்டபடி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளின் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டி மைதானங்களில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றது. இது குறித்து கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா பேசியுள்ளார்.

LIC பாலிசிதாரர்களின் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அதில், கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள், சி.பி.எஸ்.சி பள்ளிகள் என மொத்தம் 2,064 பள்ளிகள் உள்ளன. பள்ளிகள் திறப்பது தொடர்பான அனைத்து முன்னேற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், அரசின் வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி வளாகங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!