பிப்ரவரி 17ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு திடீர் அறிவிப்பு!

0
பிப்ரவரி 17ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு திடீர் அறிவிப்பு!
பிப்ரவரி 17ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு திடீர் அறிவிப்பு!
பிப்ரவரி 17ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு திடீர் அறிவிப்பு!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 17 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று குறைந்த நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களாக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க ஆரம்பித்தனர். முதல் கட்டமாக மேல்நிலை வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெகு நாட்களுக்கு பிறகு நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் தொற்று வேகமெடுக்க தொடங்கியது. மஹாராஷ்டிரா, கர்நாடக, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.இதனால் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியானது.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஓரளவு மக்கள் தடுப்பூசிகளை செலுத்தியிருப்பதால் மூன்றாம் அலை பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. அதனால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி முதல் இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப். 17 முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களையும் திறக்க இமாச்சலப் பிரதேச அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here