டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!
டிசம்பர் 1ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்த முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா பரவலால் மாணவர்கள் கற்றல் பின்னடைவை சந்திக்கின்றனர் என்று கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் நகரில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நகராட்சி ஆணையரால் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது. பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கான பெற்றோரின் ஒப்புதல் முறை மற்றும் தற்போதுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பெயர் பட்டியல் வெளியிட கோரிக்கை!
குழந்தைகளுக்கான கோவிட்-19 பணிக்குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, அனைத்து பள்ளிகளையும் 1 ஆம் வகுப்பிலிருந்து மீண்டும் திறக்கும் திட்டம் கல்வித் துறையால் முன்வைக்கப்பட்டது. இதனால் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று மருத்துவமனையில் இருந்து அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், சிறிய வயது குழந்தைகளுக்கான நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை மேலும் சிறப்பாக சரிசெய்வதற்கு பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் குழந்தை மருத்துவ பணிக்குழுவிடம் ஆலோசிக்கப்படும்.
தாராபுரத்தில் நவ.30ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் டே கேர் மையங்களை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களின் முடிவின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினார்கள். மேலும், டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் அரசின் இந்த முடிவை ஏற்றுள்ளது. ஆனால் கட்டாய வருகை முறையை அமல்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில், சிறு குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் கற்பிப்பது கடினமாக இருக்கும் என்று தனியார் பள்ளியின் முதல்வர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.