தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது – கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!

0
தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது - கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது - கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!
தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது – கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி மலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பு கிடையாது என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பள்ளி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் 1 முதல் முதல் கட்டமாக 9 – 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்பு மாணவர்களின் கல்விநிலை கருதி பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை பரிசீலித்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டது. தற்போது நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்தே வேலை (WFH) செய்பவர்கள் கவனத்திற்கு – எளிய உடற்பயிற்சிகள்!

இதையடுத்து பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிகள் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்கவும் கோரிக்கை எழுந்தது. தற்போது அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு உணவு சமைக்கப்பட்டு அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 1ம் தேதி முதல் 1 – 8 வரையிலான வகுப்புகளை தொடர்ந்து மழலையர், நர்சரி பள்ளிகளும் திறக்கப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்தார். மேலும் நவம்பர் 1ம் தேதி மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு கிடையாது என்று அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனையடுத்து மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகளில் பயில கூடிய மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டும் அதில் பணிபுரியும் ஆசிரியர்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று நர்சரி பள்ளி உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here