தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பினை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் செப்.1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் விதிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் செயல்படுகின்றன. இதற்கு அடுத்தகட்டமாக 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. இதற்கிடையில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் 9 – 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – பட்டதாரி ஆசிரியர் கழகம்!

பண்டிகை தினங்களில் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் கொரோனா தொற்று பரவல் தீவிரமெடுக்க வாய்ப்புள்ளது. இதனால் நவம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பது சாத்தியமற்றது. ஆனால் திட்டமிட்டபடி பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். அதற்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக பள்ளிக்கு வரும் 1ம் வகுப்பு மாணவர்களுடன் அவர்களின் பெற்றோரும் வகுப்பறையில் இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகை கால மக்கள் கூட்டம், பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் என அனைத்து இடங்களும் நிரம்பி வழியும்.

தமிழகத்தில் அதிரடியாக குறைந்த கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 1,289 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை அறிக்கை!

ஏற்கனவே போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதை காண முடிகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை திறப்பை ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here