தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முடிவு குறித்து அக்டோபர் 12 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி கோரத்தாண்டவம் ஆடியது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.
தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு!
எனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கி வந்த நிலையில் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் தேதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டது.
மத்திய பல்கலையில் அக்.20 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம் – தடுப்பூசி கட்டாயம்!
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். அதன்பின் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்தும் அவ்வாறு திறப்பதாக இருந்தால் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Please don’t open the school
Corona peakla pogumnu doctors solraanga. Appoathaan school thirakanuma. Konjam kooda common sense kidayadha ……
Unga lpasangalukku onnum theriyathu parava ellaiya
Please open school immediately, because children are mentally depressed and knowledge is very very low
Rainy seasonla summavay cold,cough,fever nu kasta paduvanga…ippa poi school open panringa..parents and kids corona vanthu rumonu payanthu sagava???indha term ah vittutu next term january to may varaikum vaynumnalu school vatchi konga..ivlo nal waste ayitu athoda indha 2monthsum(padipa vida uyir mukiyam)kulanthaigaluku onnuna parents ah la eppadi thanga mudiyum?
November,December,January 3 months are peak of cold month even normal person can affected by cold and cough, How about the children? In this coronavirus situation plz think about all the children like your children and take decisions