தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை முன்வைப்பு!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை முன்வைப்பு!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை முன்வைப்பு!
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை? அரசுக்கு கோரிக்கை முன்வைப்பு!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பதற்கும், குழந்தைகளின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நிறுத்தி விடுமுறை அளித்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிகள் மூடல்:

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் இரவு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – A டூ Z தகவல்கள் இதோ!

தமிழ்நாட்டில் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் 120 அதாவது 19.38% அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பரவல் நேற்று ஒரே நாளில் 51% அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து வேலூர், விழுப்புரம் உட்பட 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் தொற்று பாதிப்பு மும்மடங்காக அதிகரித்து தற்போதைய எண்ணிக்கை 294 ஆகும். காஞ்சிபுரத்தில் நேற்று மட்டும் தினசரி தொற்றுகளின் அளவு 73 சதவிகிதமும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் 4.65 லட்சம், பிரான்ஸ் 2.08 லட்சம், இங்கிலாந்து 1.83 லட்சம், ஸ்பெயின் 1 லட்சம் என்ற அளவில் பரவி வருவதையும், கேரளத்தில் சுமார் 3 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரித்து உள்ளது.. இந்த நிலையில் ஓமைக்ரான் பரவல் அதிகரிப்பதால் தமிழகத்தில் மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக நோயியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இந்த தொற்று பாதிப்பு காரணமாக பல வட மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு – அமைச்சகம் தகவல்!

இந்தியாவில் இதுவரை ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. தமிழ்நாட்டில் மூன்றாவது கொரோனா அலை தடுப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளித்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க வேண்டும் என தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here