தமிழக பள்ளிகளில் ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ – பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

0
தமிழக பள்ளிகளில் 'பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்' - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழக பள்ளிகளில் 'பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்' - பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
தமிழக பள்ளிகளில் ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ – பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம்

தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கென்று இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு, நான் முதல்வன், காலை சிற்றுண்டி , எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு “தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

மேலும் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்க்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக மாணவர்களுக்கிடையே புதிய தொழில் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கிரெடிட் & டெபிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

அத்துடன் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது, தொழில் முனைதல், தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சிகள் வழங்கப்படும் போது, புத்தாக்க சிந்தனை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை கொண்ட கதைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!