ஆதார் கார்டு பதிவிற்கு பள்ளி அடையாள அட்டை – UIDAI அறிவிப்பு!
இந்தியாவில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி அடையாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்து வரும் டிசம்பர் 31ம் தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தம் பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் பதிவு மற்றும் திருத்தம் :
ஆதார் அட்டை அடையாள ஆவணமாக திகழ்கிறது. மேலும் இந்த ஆதார் 12 இலக்க எண்களை கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ,புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி பயோமெட்ரிக் கைரேகை, கருவிழி உடற்கூறு விவரங்கள் ஆகியவை ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தற்போது தேவைக்கேற்ப ஆதாரில் விவரங்களை மாற்றம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
முகவரி, புகைப்படம், மொபைல் எண், போன்றவற்றை ஆன்லைன் மூலம் மற்றும் வசதி வந்துவிட்டது. மேலும் அரசின் ஆதார் சேவை மையத்தை அணுகியும் மாற்றத்தை பெறலாம். இதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரில் தங்கள் விவரங்களை மாற்றுவதற்கு உரிய ஆவணம் அவசியமாகும். இதில் பள்ளியின் அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஆனால் கொரோனா அபிராவால் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் தீர்க்கப்படாததால் ஆதார் பள்ளிகளில் இந்தாண்டிற்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் 2019-20ம் கல்வியாண்டுக்கான அடையாள அட்டையை ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தத்தின் போது பயன்படுத்தி கொள்ளலாம் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.