அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

0
அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை - மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த வேளையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். அரசும் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். மேலும், மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமர் மோடி எச்சரிக்கை பதிவு!

இதுமட்டுமல்லாமல் மக்கள் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இந்த கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் இந்தியாவில் படிப்படியாக தொற்று குறைய ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் XE என்னும் புதிய வகை கொரோனா வைரஸும் தற்போது பரவி வருகிறது. மற்ற வைரஸ்களை விட இந்த XE வகை வைரஸ் வீரியம் உள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த XE வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஒருவருக்கும் கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் இந்தியாவில் கொரோனா வரவிடாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு எச்சரித்திருந்தது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற மாணவர்களுக்கும் இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க திங்கள் முதல் புதன்கிழமை வரை அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!