மார்ச் 6 வரை 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – மார்ச் 7 மீண்டும் திறப்பு!

0
மார்ச் 6 வரை 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - மார்ச் 7 மீண்டும் திறப்பு!
மார்ச் 6 வரை 1 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - மார்ச் 7 மீண்டும் திறப்பு!
மார்ச் 6 வரை 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – மார்ச் 7 மீண்டும் திறப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பள்ளிகளும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக மார்ச் 7 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஜார்க்கண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜார்க்கண்ட் அமைச்சர் பன்னா குப்தா கூறுகையில் ‘கொரோனா பரவல் காரணமாக 7 மாவட்டங்களில் மட்டும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டுமாக பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

இது குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 7 மாவட்டங்களில் வகுப்பு 1 முதல் 9 வரையுள்ள மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் பள்ளிகள் திறக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், சில கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்தும் தளர்வுகளை அளிப்பதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இம்மாநிலத்தில் பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பன்னா குப்தா குறிப்பிட்டுள்ளார்.

மூர்த்தி சொல்லியும் காலேஜ் போகாத ஐஸ்வர்யா, குழந்தை பற்றி பேசிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இதனுடன் சந்தைகளில் இரவு 8 மணி வரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உணவகங்கள் மற்றும் பார்கள் 100% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. எனினும் மாநிலம் முழுவதும் பொது கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவது தடைசெய்யப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த கூடுதல் தளர்வுகள் இன்று (பிப்.26) முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here