தமிழகத்தில் நாளை (பிப்.3) பள்ளிகளுக்கு விடுமுறை – தொடர் மழை எதிரொலி!!
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை (பிப்ரவரி 3) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இலங்கை அருகே கரையை கடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் இதை முடிக்க வேண்டும்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில், கனமழையை கருத்தில் கொண்டு திருவாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (பிப்ரவரி 3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் பிறப்பித்துள்ள உத்தரவில், கனமழை காரணமாக திருவாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காரைக்காலிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.