144 தடை உத்தரவு அமல் & பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

0
144 தடை உத்தரவு அமல் & பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
144 தடை உத்தரவு அமல் & பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு!
144 தடை உத்தரவு அமல் & பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அதிரடி அறிவிப்பு!

கர்நாடகாவில் இந்து இளைஞர் படுகொலையால் அம்மாநிலத்தின் ஷிவமோகாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஷிவ்மோகா மற்றும் பத்ராவதி நகர்களில் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு:

கர்நாடக மாநிலத்தில் சில மாவட்டங்களில் முஸ்லீம் பெண்கள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதை கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதனை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முஸ்லிம் மாணவிகளும், பல்வேறு அமைப்பினரும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இது குறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் இந்த விவகாரம் இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்களுக்கிடையேயான போராட்டமாக மாறியது. இதனால் கர்நாடகாவில் பதற்றமான சூழல் உருவாகியது.

மாநிலம் முழுவதும் இரவுநேர முழு ஊரடங்கு உத்தரவு? அரசு விளக்கம்!

இந்த நிலையில் அடுத்த சம்பவமாக கர்நாடகாவின் ஷிவ்மோகா மாவட்டத்தில் இந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் சில அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட இவரை மருத்துவமனையில் சேர்த்தனர் சிகிக்சை பலனின்றி இவர் இறந்தார். ஷிவமோகாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அம்மாவட்டத்தில் பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு? அரசின் முடிவு என்ன? ஒமிக்ரான் எதிரொலி!

இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பத்ராவதியில் 10 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கான பணிகள் நடைபெறுவதால் கிராமப்புறங்களில் மட்டும் பள்ளிகள் நடைபெறுகின்றன. இந்த படுகொலை குறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி இந்த சம்பவத்துக்கும் கர்நாடக ஹிஜாப் விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here