நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
குருவாயூர் ஏகாதசியை முன்னிட்டு திருச்சூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் குருவாயூர் ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும், பாரம்பரிய மலையாள நாட்காட்டியின்படி டிசம்பர் மாதத்தில் குருவாயூர் ஏகாதசி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வருடம் குருவாயூர் ஏகாதசி நவம்பர் 23 ஆம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அத்தியாவசிய வசதிகள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!
இந்த ஏகாதசி அன்று யானை ஊர்வலத்துடன் புகழ்பெற்ற ஏகாதசி விளக்கு நடைபெறுகிறது. இதனை காண பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதுண்டு. இந்நிலையில், ஏகாதசி தினத்தை முன்னிட்டு திருச்சூர் மாவட்டம் சாவக்காடு தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.