கனமழையால் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் குஷி!!

0

கனமழையால் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் குஷி!!

தமிழகத்தில் இரவும், பகலுமாய் பெய்த கனமழையின் காரணத்தினால் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கனமழை:

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த கனமழை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவும் பகலுமாய் பெய்த கனமழையால் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு – வெளியான அதிரடி அறிவிப்பு!!!

அதாவது, கடலூர், விழுப்புரம், மயிலாடுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி ஆகிய இரண்டு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!