தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!

0
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த அறிவிப்பை அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து 2022-2023ம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை குறித்த அறிவிப்பை அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில், இத்திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் முந்தைய வகுப்பில் இறுதி தேர்வில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு ஒரு வருடத்திற்கு ரூ.1000 உதவித்தொகை 1 முதல் 5ம் வகுப்புக்கும், ரூ.3000 உதவித்தொகை 6 முதல் 8ம் வகுப்புக்கும், ரூ.4000 உதவித்தொகை 9 முதல் 12ம் வகுப்புக்கும், ரூ.4000 உதவித்தொகை தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்புக்கும், இளங்கலை பட்ட படிப்புக்கு ரூ.6000 உதவித்தொகை, முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்புக்கு ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு 9 முதல் 12ம் வகுப்பு மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் பட்டய படிப்புக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – விரைவில் விண்ணப்பம் வினியோகம்!

இதே போல் ரூ.5000 உதவித்தொகை இளங்கலை பட்டபடிப்புக்கும் மற்றும் முதுகலை பட்டபடிப்பை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.6000 வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் நபர்கள் மாணவ, மாணவியர் பிற துறைகளில் கல்வி உதவித்தொகை பெறவில்லை என்று தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்ப படிவத்துடன் இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!