தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்கள் உதவித்தொகையை எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உதவித்தொகை திட்டம்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை, பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-2022-ம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை விடுபடாமல் வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது பிரி- மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 9 & 10 ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள். இதை தொடர்ந்து 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரத் தொழில் புரிவோரின் பிள்ளைகளும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆதார் எண்ணுடன் இணைந்த வங்கிக்கணக்குக்கே கல்வி உதவித்தொகை அனுப்பி வைக்கப்படும்.

Exams Daily Mobile App Download

மேலும் தொலைபேசி எண்ணை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டியது கட்டாயம். National Scholarship Portal-ல் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்திடல் அவசியம். அதோடு, மாணவர்களே நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக Nodal Officer-ஐ பள்ளிகள் நியமனம் செய்திடல் வேண்டும் எனவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 12ம் தேதி வரை மதுபானக்கடைகள் அடைப்பு – அறிவிப்பு வெளியீடு!

இதன் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சாதிச் சான்றிதழ், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் மாணவர்களின் ஆதார் எண் இணைத்து தாங்கள் பயிலும் கல்லூரிகள், பள்ளிகள் மூலமாக விண்ணப்பம் செய்து கல்வி உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கல்வி உதவித்தொகை பிரிவு தொலைபேசி எண்: 0462-2501076 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected]ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here