தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டம் – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டம் - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டம் - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை திட்டம் – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

தமிழகத்தில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளையில் ‘கற்கை நன்றே’ கல்வி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைவதற்கான விவரங்களை பற்றி பார்ப்போம்.

கற்கை நன்றே:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு மாணவ, மாணவிகள் குடும்ப வறுமை காரணமாக படிப்பை விட்டு வேலைக்கு செல்கின்றனர். அதனால் தற்போது மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களுக்கிடையே கல்வி இடை நிற்றலை தவிர்க்க கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று செயல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

இத்திட்டம் நடப்பு ஆண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடர்ந்து கோவை, குரும்பபாளையத்தில் செயல்படும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பாக ‘கற்கை நன்றே’ கல்வி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தகுதி தேர்விற்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கும் முறை & சம்பள விவரம்!

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சமாக 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  அத்துடன் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் உயர்கல்வியில் சேர இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் இத்திட்டத்தில் பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவரும் இழந்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://forms.gle/PAtS6gxAK4Q2RWtD9 என்ற லிங்கை கிளிக் செய்து பதிவு செய்யலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  தொடர்பு கொண்டும் பதிவு மேற்கொள்ளலாம்.  மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 90035 12634, 99943 87233 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!